Tamilstar
Health

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் கேழ்வரகு.

A program to help diabetics

நீரிழிவு நோயாளிகளுக்கு கேழ்வரகு உதவுகிறது.

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய்தான் நீரிழிவு நோய். இது வர முக்கிய காரணம் தவறான உணவு பழக்க வழக்கம்தான். அதனை தடுக்க சிறுதானிய உணவுகளில் ஒன்றான கேழ்வரகு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.

கேழ்வரகு உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் மாதவிடாய் பிரச்சனைகளை நீக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

இதில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளுக்கு வலுவடைய செய்கிறது.

எனவே கேழ்வரகில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.