Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமல்ஹாசன் வைத்து படம் இயக்காததற்கு காரணம் இதுதான்? ஏ ஆர் முருகதாஸ் விளக்கம்.

a-r-murugadoss-about-kamalhaasan-latest-interview

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ். பல வெற்றி திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் ‘ஏ ஆர் முருகதாஸ் புரொடக்ஷன்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

அதில் நல்ல திரைப்படங்களை தயாரித்து அதிலும் வரவேற்பை பெற்று வரும் ஏ ஆர் முருகதாஸ் தற்போது தனது தயாரிப்பில் தன்னுடன் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கும் 1947- ஆகஸ்ட் 16′ திரைப்படம் வரும் 7 ஆம் தேதி திரைக்கு வரை இருக்கிறது.

இதற்கான பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்திய நேர்காணலில் ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்திருக்கும் பல சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது இணையதளத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் முருகதாஸ் இடம் நடிகர் கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்றால் உங்களிடம் அதற்கான சப்ஜெக்ட் இருக்கிறதா?.. என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் அளித்துள்ள விளக்கம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அதில் அவர், பொதுவாகவே கமல் என்றால் எனக்கு அப்போது இருந்தே சிறிய பயம் இருக்கும். ஆனால், எல்லா இயக்குனருக்கும் கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏனென்றால் கமல் சாரை வைத்து இயக்கும் படங்கள் தான் அந்த இயக்குனர்களின் கேரியரில் பெஸ்ட் படமாக இருக்கும். இதில் நான் சாதாரண படத்தை எடுத்திவிடக் கூடாது என்ற பயத்தில் தான் இதை செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

a-r-murugadoss-about-kamalhaasan-latest-interview
a-r-murugadoss-about-kamalhaasan-latest-interview