இந்திய திரையுலகில் தனது இசையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஆஸ்கார் நாயகனாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் கடந்த மாதம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த மாமன்னன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிக்கு ஏ ஆர் ரகுமான் தான் காரணம் எனக் குறிப்பிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
அதற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள், இன்றைய தலைமுறை இயக்குனர்களுடன் பணிபுரிவதை விரும்புவதாகவும் சமூக நீதிக்காக கலைநயத்துடன் செயல்படுபவர்கள், மனிதநேயத்தை உயர்த்துபவர்கள் எனக் குறிப்பிட்டு உதயநிதி மற்றும் மாமன்னன் படகுழுவினருக்கும் சிறப்பு நன்றி. எனக் குறிப்பிட்டு ரீ-ட்வீட் செய்து இருக்கிறார். இவர்களது இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
Thank you @mari_selvaraj love working with new gen directors like you,who do things for social justice in an artistic way,rising humanity higher🔥♥️ special thanks to @Udhaystalin and the whole #Mamannan team! EPI https://t.co/OeS5r7bh5s
— A.R.Rahman (@arrahman) July 15, 2023