Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரீமேக் படத்தில் இருந்து விலகிய அமீர் கான்

Aamir Khan withdraws from remake

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரிக்க இருந்தார். புஷ்கர் – காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள்.

விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷாரூக் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால், முழு திருப்தி இல்லை என விலகிவிட்டதாகக் கூறப்பட்டது. அவரைத் தொடர்ந்து விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர் கான், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் ஆகியோர் நடிப்பது உறுதியானது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு படத்தின் பணிகள் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் முன்பே ஒப்புக் கொண்ட பணிகள் அனைத்துமே மாறியிருப்பதால் ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து அமீர் கான் விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.