தமிழ் சினிமாவின் தல என்று தலையில் தூக்கி கொண்டாடப்படுபவர் அஜித். இவர் இதுவரை 50ம் அதிகமான படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
தல என்ற ஒரு சொல் ஒட்டு மொத்த இளைஞர்களையும் தன் பக்கம் கட்டிப்போட்டுள்ளது, அவர் இந்த உயரத்தை அடைய பலவிதமான கஷ்டங்களையும் தோல்விகளையும் கடந்து வந்துள்ளார்.
அவர் கடந்து வந்த பாதையில் எப்போதும் மலர்கள் கொட்டவில்லை, பல இடங்களில் முற்கள் தான் இருந்துள்ளது.
அப்படி அஜித் கஷ்டப்பட்ட காலத்தில் அவருடைய திரைப்பயணத்தையே திருப்பி போட்ட படம் ஆசை, அஜித்தின் முதல் ப்ளாக் பஸ்டர் படம்.
இப்படத்திற்கு டப்பிங் தன் சொந்த குரலில் பேச வேண்டும் என அஜித் எவ்வளவோ முயன்றும் கடைசியில் சுரேஷ் தான் பேசினார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித் எப்போதும் பிரகாஷ்ராஜிடம், நா நல்லா வருவேனா சார் என்று கேட்டுக்கொண்டே இருப்பாராம்.
அதற்கு பிரகாஷ்ராஜும், ஏன் அஜித் பார்க்க நல்லா இருக்கீங்க கண்டிப்பா நல்ல வருவீங்க என்றாராம்.
அதை தொடர்ந்து படப்பிடிப்பு முடிய ஆசை படத்தின் ப்ரீமியர் காட்சி நடந்தது. அஜித் மிகவும் நம்பிக்கையாக அங்கு சென்றார்.
ஆனால், பேர் புகழ் எல்லாம் பிரகாஷ்ராஜ் பக்கம் செல்ல அஜித்திற்கு கொஞ்சம் ஏமாற்றம், அங்கிருந்து எல்லோரும் கிளம்ப அஜித் உடனே நடுரோட்டில் ஓடி சென்று பிரகாஷ்ராஜிடம் நீங்கள் சூப்பராக நடித்துவிட்டீர்கள்.
உங்களுக்கு தான் இந்த படத்தில் பேர் புகழ் எல்லாம், ஆனால் கண்டிப்பாக நான் இது போலவே ஒரு நெகட்டிவ் ரோல் செய்வேன் என்றாராம்.
அந்த சபதம் தான் அஜித்தை வாலி படத்தில் நடிக்க வைத்ததாம், அதை தொடர்ந்து மங்காத்தா படத்திலும் அவர் வில்லனாக மிரட்டியது குறிப்பிடத்தக்கது.