தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சி மூலம் நடிகர் ஆர்யா தன்னுடைய திருமணத்திற்காக பெண் தேடினார்.
பல பெண்கள் போட்டியாளராக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் அபர்ணதி. ஆர்யாவுக்கு பக்காவான ஜோடி என ரசிகர்கள் இவரை கூறி வந்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஜெயில் படத்தில் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் பக்கா குப்பத்து பெண்ணாக அழகான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது எந்த ஒரு வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் அபர்னதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண் கண்ணாடி அணிந்து வித்தியாசமான லுக்கில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
View this post on Instagram