புதிய ரேஸ் கார் ஒன்று வாங்கியுள்ளார் அஜித்குமார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.
தற்போது கார் ரேஸில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த நிலையில் பல கோடி மதிப்பிலான அதாவது சுமார் பத்து கோடி மதிப்புள்ள ரேஸ் காரை அஜித்குமார் வாங்கியுள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Senna brought to life with Ajith Kumar bringing the Mc Laren Senna home!#ajithkumar pic.twitter.com/Pu3SzHstnu
— Ajithkumar Racing (@Akracingoffl) June 4, 2025