தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் திரிஷா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நிதி நெருக்கடி காரணமாக படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார். இந்த படம் 2025-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் விரைவில் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நாள் ஏப்ரல் மற்றும் மே மாதம் முழுவதும் லைக்கா நிறுவனத்திற்கு கால் சீட் கொடுத்திருப்பதாகவும் அதற்குள் படப்பிடிப்பை முடித்து விட வேண்டும் எனவும் அதன் பிறகு கால் சீட் கொடுக்க முடியாது எனவும் வார்னிங் கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.