தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்ததைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அஜித்துக்கு வாழ்த்து கூறி பதிவு செய்து வந்தனர். ஆனால் உலக நாயகன் கமல்ஹாசன் எந்த ஒரு பதிவையும் பதிவு செய்யவில்லை.
விஜய்யின் பிறந்தநாளில் பதிவு செய்த இவர் அஜித்தின் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பதிவு செய்யாத நிலையில் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் மேல உங்களுக்கு இவ்வளவு பொறாமையா என பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
ஆனால் அஜித் பல வருடங்களுக்கு முன்னர் ஜெயா டிவியில் அளித்த பேட்டி ஒன்றில் பெண் ஒருவர் கமல்ஹாசன் என சொல்ல நாட் கமலஹாசன் கமல் சார் இல்லனா மிஸ்டர் கமல்ஹாசன் என சொல்லுங்கள் என்று மரியாதையாக பேசிய வீடியோவை ஷேர் செய்து இது தான் உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம் என விமர்சனம் செய்து வருகின்றனர்.