தமிழகத்தில் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. மழை நின்ற பிறகு மீட்ப பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்தி உள்ளது.
பல்வேறு இடங்கள் பழைய நிலைக்கு வந்துவிட்டாலும் இன்னும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், மணப்பாக்கம், முடிச்சூர் போன்ற பகுதிகள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.
இதனால் தமிழக அரசு, நடிகர் நடிகைகள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் என பலரும் மீட்பு பணியில் இறங்கி மக்களுக்கு கை கொடுத்து வருகின்றனர். முதல்வர் நிவாரண நிதிக்கும் தொடர்ந்து பலர் நிதி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித் பப்ளிசிட்டி இல்லாமல் பலருக்கும் மறைமுகமாக தொடர்ந்து உதவிகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர் உதவிகளை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் பலரும் அஜித்தை பாராட்டி வருகின்றனர்.
Just heard from few friends that #AjithKumar #AK is helping a lot of people with money and other necessities.
But he doesn’t want publicity like many others who carry video cameras to shoot reels of them helping public!! Please, let’s do our bit, but not for cheap publicity…
— sridevi sreedhar (@sridevisreedhar) December 7, 2023