Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்துக்கு உதவிய அஜித்.!! வைரலாகும் தகவல்

actor ajith helps to marimuthu family

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என பல்வேறு திறமைகளுடன் வலம் வந்தவர் மாரிமுத்து. எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எதிர்நீச்சல் தொடரில் இனி ஆதி குணசேகரனாக நடிக்க போவது யார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதே சமயம் யார் நடித்தாலும் மாரிமுத்து இடத்தை நிரப்ப முடியாது என பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு பத்தாவது படிக்கும் வரை பணம் கட்டி படிக்க வைத்தவர் அஜித் தான் என மாரிமுத்து பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதேபோல் மாரிமுத்து தம்பியும் அஜித் தான் அவருடைய இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்தார் என்று சொல்லிய தகவலும் இணையத்தில் வைரலாக பலரும் அஜித்தின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

actor ajith helps to marimuthu family
actor ajith helps to marimuthu family