Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஏர்போர்ட்டில் நடிகர் அஜித்குமார் வீடியோ வைரல்

actor ajith kumar latest airport video viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள 62 ஆவது படத்தில் நடிக்க உள்ளார்.

அனிருத் இசையமைப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இன்று ஏர்போர்ட் சென்றிருந்த தல அஜித் குமாரின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வெளியாகி தல ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.