Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன்.. எத்தனை கோடி தெரியுமா? வைரலாகும் தகவல்

actor amitabh-bachchan-buys-plot-in-ayodhya

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தற்போது இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கல்கி 2898- ஏடி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் தீபிகா படுகோனே கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகிற மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.

இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சன், அயோத்தியில் குடியேறவுள்ளார். அதாவது, அயோத்தியின் சரயு நகரில் 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை இவர் வாங்கியுள்ளதாகவும் இந்த நகரம் வரும் மே 22-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் வாங்கியுள்ள நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.14.5 கோடி எனவும் இந்தப் புதிய நகரத்தை லோதா நிறுவனம் உருவாக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம்தேதி நடைபெற உள்ளது. அன்று ராமர் சிலை கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor amitabh-bachchan-buys-plot-in-ayodhya
actor amitabh-bachchan-buys-plot-in-ayodhya