தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அவரை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன், முதல்வர் முக ஸ்டாலின் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டது.
ஆனால், நடிகர் அர்ஜுன் கோவில் ஒன்றை கட்டி இருப்பதாகவும், அந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு முதல்வர் முக ஸ்டாலினை அழைக்க வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பின் போது முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அர்ஜுன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.