தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தன்னுடைய திறமையால் இன்று பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். இவருக்கு சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஏதோ வாய்க்கா தகறாரு இருப்பதாகவே பல வருடங்களாக பேசப்பட்டு வந்தது.
இதற்கு காரணம் அருண் விஜய் ஒரு முறை இவரெல்லாம் மாஸ் ஹீரோ யார் என சிவகார்த்திகேயன் குறித்து விமர்சனம் செய்து ட்வீட் செய்தார் என்பதுதான். ஆனால் இது நான் செய்த ட்வீட் இல்லை, என்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது என அருண் விஜய் விளக்கம் அளித்திருந்தார்.
இருப்பினும் இவர்களின் ரசிகர்களுக்கு இடையே இருந்துவந்த பிரச்சினை முடிந்த பாடில்லை. இப்படியான நிலையில் நடிகர் அருண் விஜய் சமீபத்தில் தன்னுடைய யானை படத்திற்காக அளித்த பேட்டி ஒன்றில் எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் என்னுடைய ட்ராக் வேற அவருடைய டிராக் வேற எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அருண் விஜய் மகன் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.