Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்த அருண் விஜய்

Actor Arun Vijay in TVMalai Temple

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் முழுக்க முழுக்க தன்னுடைய திறமையால் படிப்படியாக முன்னேறி இன்று பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் விரைவில் யானை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கைவசம் ஆக பல்வேறு படங்களை வைத்துக் கொண்டுள்ளார். கொரானாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சமீபத்தில் மீண்டு வந்தார்.

இந்த நிலையில் நடிகர் அருண்விஜய் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் வந்து சாமியை வழிபட்டுள்ளார். நடு இரவில் கிரிவலம் வந்த புகைப்படங்களை அருண் விஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Arun Vijay (@arunvijayno1)