தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான வடசென்னை, கர்ணன், அசுரன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் இடையிடையே சில தோல்வி படங்களையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
இவரது நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன், அந்தராங்கி ரே உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியை தழுவின. கார்த்திக் நரேன் இயக்கிய இந்த படத்தில் சமுத்திரகனி அரசியல்வாதியாக நடிக்க அவரது உதவியாளராக போஸ் வெங்கட் நடித்திருந்தார்.
இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு தன்னுடைய மனைவி சோனியா தன்னை கட்டி பிடித்து அழுதார். 16 வருடத்திற்கு முன்னர் சிவாஜி படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடித்தீர்களோ அதையே தான் இந்த படத்திலும் செய்திருக்கிறீர்கள். உங்களிடம் வளர்ச்சி இல்லை, அப்படி இல்லை என்றால் சரியான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் பக்குவம் உங்களுக்கு வரவில்லை என சொன்னார்.
தனுஷ் மீது எந்த வருத்தமும் எனக்கு இல்லை. ஆனால் ஏன் இந்த படத்தில் நடிப்பதற்காக என்னை அழைத்தார்கள் என வருத்தப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார். மன உளைச்சலில் தவித்தேன் என தெரிவித்துள்ளார்.