தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை என இரண்டிலும் பிரபல நடிகராக வலம் வருபவர் போஸ் வெங்கட். இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது வீட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மரணங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன. மாரடைப்பு காரணமாக இவரது சகோதரி வளர்மதி சென்னையில் காலமாக அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றுள்ளது.
இந்த இறுதி சடங்கில் பங்கேற்ற போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதன் என்பவரும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். இப்படி ஒரே நாளில் மாரடைப்பு காரணமாக ஏற்பட்ட இரண்டு மரணங்கள் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்கள் சமூக வலைதள வாசிகள் என பலரும் போஸ் வெங்கட் அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.