தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் பப்லு பிரித்திவிராஜ். அஜித் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற இவர் தன்னைவிட முப்பது வயது சிறிய பெண் சீத்தல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது.
இன்டர்வியூ ஒன்றில் பப்லுவிடம் உங்களுக்கு பெண் சுகம் கேட்குதா என்று தொகுப்பாளர் கேட்க அதற்கு அவர் ஆமாம் என ஓப்பனாகவே பதில் அளித்து இருந்தார்.
இப்படியான நிலையில் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஒன்றாக இருந்த புகைப்படங்களை நீக்கி உள்ளனர். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எடுப்பேன் அந்த கமெண்ட்டுக்கு லைக் செய்து பிரிவை உறுதி செய்துள்ளார் சீத்தல்.
அதேபோல் பப்லுவும் தனியாக பிறந்த நாள் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் இவர்களது பிரிவு உறுதியாகிவிட்டது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.