தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, விக்ரம், அஜித், விஜய், சூர்யா என மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் சார்லி. இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த புகாரில் நடிகர் சார்லி கூறியிருப்பதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றி வரும் நான், எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பெயரில் என்னுடைய அனுமதி இன்றி, ட்விட்டரில் போலியாக கணக்கு துவங்கப்பட்டு உள்ளது. இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.