கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் வாத்தி படத்தின் வரவேற்பை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களை கமிட் செய்து வைத்திருக்கும் நடிகர் தனுஷ் அவரது ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் படம் தொடர்பான லேட்டஸ்ட் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, தனுஷின் D50 திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் தற்போதுவரை எஸ் ஜே சூர்யா, சுதீப் கிஷன், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் உள்ளிட்டோர் இணைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தில் பல பிரபலங்கள் இணைந்து இருப்பதால் இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது.
#D50 Getting Bigger and Bigger❤️🔥
– #SJSuryah & #SundeepKishan roped in to play brother role of Dhanush💫
– Vishnu Vishal, Dushara Vijayan & Kalidas doing important role
– Film set on the backdrop of North Medras👌💥
– Dir by #Dhanush & #ARRahman Music🎬🎵
– Shooting begins after… pic.twitter.com/wjJUCgVgYZ— AmuthaBharathi (@CinemaWithAB) May 24, 2023