Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திரையரங்கில் ரீ – ரிலீஸ் ஆகும் நடிகர் தனுஷ் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Actor Dhanush Re-Release Movie Update

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளியான “துள்ளுவதோ இளமை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் கதை எழுத, அதனை அவர்களின் அப்பாவான இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கியிருந்தார்.

இப்படம் திரையரங்கில் வெளியாகி பல சர்ச்சைகளை சந்தித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்திருந்தது. இந்நிலையில் இப்படத்தை 20 வருடங்கள் கழித்து மீண்டும் திரையரங்கில் நாளை வெளியாகவுள்ளது.

இந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தை டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு குருராஜா இன்டர்நேஷனல் நிறுவனம் நாளை சென்னையில் பிவிஆர், ஈவிபி, மாயாஜால் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரைகள் உள்பட 25 தியேட்டர்களில் வெளியிடவுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Actor Dhanush Re-Release Movie Update
Actor Dhanush Re-Release Movie Update