Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகன்களுடன் திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த தனுஷ், வீடியோ இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் தனுஷின் ஐம்பதாவது படமாக வெளியானது ராயன்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி இருந்த இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்று வருகிறது. ‌இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் சிவனுக்கு நன்றி சொல்லும் விதமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.