Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகரும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடித்த சேதுராமன் சென்னையில் நேற்று இரவு 8.30 மணி (March 26, 2020) அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன்.

இவர் எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார்.

YoutTube மூலமும் மக்களுக்கு மருத்துவ தகவல்களையும், முக அழகு சீரமைப்பு, முடி வளர்ச்சி என அனைத்திற்க்கும் சிகிச்சை மட்டுமின்றி அறிவுரையும் வழங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சேது ராமன் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.