தமிழ் சினிமாவில் கடல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்தியின் மூத்த மகனான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
தேவராட்டம் உட்பட சில படங்களில் மஞ்சிமா மோகன் உடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் அவரை காதலித்து வருவதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால் இருவரும் இது பற்றி வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.
கூடிய விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் சமீபத்தில் செய்திகள் பரவிய நிலையில் கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாள் அன்று மஞ்சிமா மோகன் ஹாப்பி பர்த்டே மை பேவரைட் ஹியூமன் என பதிவு செய்ய அதற்கு பதிலாக தேங்க்யூ மை ஃபேவரிட் ஹியூமன் என கௌதம் கார்த்திக் பதில் அளித்துள்ளார்.
இப்படி இருவரும் மாற்றி மாற்றி ஹார்டின் சிம்பலுடன் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பரிமாறிக் கொண்டதை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் இடையே உள்ள காதலை உறுதி செய்துள்ளதாக கூறி வருகின்றனர். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Happy birthday to my favorite human❤️@Gautham_Karthik pic.twitter.com/sHYtA9IDVc
— Manjima Mohan (@mohan_manjima) September 12, 2022