Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தன் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கௌதம் கார்த்திக். வைரலாகும் க்யூட் புகைப்படம்

actor gautham karthik confirm his love

ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறும் பிரபலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளிலும் இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

அந்த வகையில் இந்த வரிசையில் தற்போது புதியதாக இணைந்துள்ளனர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஜோடி. இருவரும் தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்த நிலையில் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

ஆனால் இருவருமே இது பற்றி மூச்சு விடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கௌதம் கார்த்திக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மஞ்சிமா மோகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதி செய்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றன.

விரைவில் இவர்களின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.