தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜிவி பிரகாஷ். மேலும் சமூகப் பிரச்சனைகளுக்கு முதலாக குரல் கொடுக்கும் நபராக இருக்கிறார்.
இவர் பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போதைய இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்து வரும் நிலையில் இருவரும் பிரியப் போவதாக ஏற்கனவே தகவல்கள் பரவி வந்தன.
தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் இருவரும் ஒருமனதாக பிரிவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவில் எங்களது 11 வருட திருமண வாழ்க்கையை மன நிம்மதிக்காக முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாடகி சைந்தவி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram