தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். இந்த படத்தை தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் இவர் ஆயுத பூஜை தினத்தில் தனது பீட்டர் பக்கத்தில் காதலியுடன் கைகோர்த்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்க்கையில் புதிய தொடக்கம் என காதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொள்ள போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இவர்களது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பலரும் இவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
Thank you rekha & team @DoneChannel1 🤗🙏 https://t.co/rSrWXZbZfS
— Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022