Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெயம் ரவி வெளியிட்ட வீடியோவால் கடுப்பான ரசிகர்கள்

Actor jayam-ravi-new-announcement-video

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தான் ஜெயம் ரவி. இவர் தனது முதல் படமான ஜெயம் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கண்டவர். இப்படத்தாள் வெறும் ரவி என்று அழைக்கப்பட்ட இவர் ஜெயம் ரவி என்று அனைவருக்கும் பரீட்சையமானார்.

அதற்குப் பிறகு உனக்கும் எனக்கும், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாம் தூம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். எப்போதும் வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்க ஆர்வம் காட்டி தன்னை வளர்த்துக் கொள்ளும் ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வீடியோவை இணையத்தில் வெளியிட போவதாக ஜெயம் ரவி அறிவித்தார். ரசிகர்களும் ஆவலாக அந்த வீடியோகாக காத்திருந்தனர். ஆனால் தற்போது அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். ஏனெனில் அந்த வீடியோவில் இதுவரை வந்த ஜெயம் ரவியின் பட போஸ்டர்கள் மட்டுமே இருக்கிறது. அதனை தொடர்ந்து இறுதியில் வரும் 29ஆம் தேதி அடுத்த படம் அறிவிப்பு வரும் என்று அறிவிப்புக்கு ஓர் அறிவிப்பாக இந்த வீடியோ அமைந்துவிட்டது. இதனால் ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து கடுப்பாகி இருக்கின்றனர்.