தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர்தான் ஜெயம் ரவி. தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அந்த வகையில் இவரின் தீவிர ரசிகரான செந்தில் என்பவர் திடீரென்று மரணம் அடைந்திருக்கிறார்.
இதனை அறிந்த ஜெயம் ரவி மதுரை மாவட்டத்தை சேர்ந்த செந்திலின் வீட்டிற்கு சென்று அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதன் பின் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஜெயம்ரவி செந்திலின் உடன் பிறந்தவர்களுக்கான படிப்பு செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார். ஜெயம் ரவியின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர்.
![Actor jayam-ravi-went-to-the-fan-house](https://b3585245.smushcdn.com/3585245/wp-content/uploads/2022/06/176414.jpg?lossy=2&strip=1&webp=1)