தமிழ் திரையுலகில் மற்ற மொழி சினிமா நடிகர்கள், நடிகைகளும் நடித்து வருகிறார்கள். அவ்வகையில் வேதாளம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருப்பவர் கபீர் துஹான் சிங்.
விஜய் சேதுபதியுடன் ரெக்க படத்திலும் அவர் நடித்திருந்தார். கடந்த வருடம் அவருக்கு தன் தோழியும், காதலியுமான டோலி சித்துவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இவ்வருடம் செப்டம்பர் அல்லது நவம்பரில் திருமணம் நடைபெற இருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு என நிலைமை சரியில்லாததால் திருமணத்தை டிசம்பரில் தள்ளிவைத்துள்ளனராம்.