Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மணிரத்னம் மற்றும் பொன்னியின் செல்வன் பட குழுவை பாராட்டி கமல் போட்ட பதிவு

actor-kamalhaasan-latest-interview

கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மாபெரும் நட்சத்திர பட்டாலங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் சாதனை செய்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்து இருந்தது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வரும் இப்படம் வெளியாகி 4 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து திரையரங்கில் கண்டு களித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் அதில், “மக்கள் இப்படத்தை பெரும் அளவில் ஆதரிக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் போற்றும் ஒரு படத்தை எடுப்பதற்கே ஒரு தனி துணிச்சல் வேண்டும். அதை எடுத்து முடித்திருக்கும் வீரனாக இருக்கும் மணிரத்னத்தையும், அவருக்கு உறுதுணையாக இருந்த நட்சத்திர பட்டாளத்தயும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்” என்று அனைவரையும் பாராட்டி பேசி இருக்கிறார் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.