இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் விக்ரம் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், அமிதாபச்சன் நடிப்பில் உருவாகி வரும் ‘கல்கி 2989 AD’ என்னும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இது குறித்து சமீபத்தில் அவர் பகிர்ந்து இருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், “கல்கி படத்தில் நான் நடிக்கிறேன் என்றதும் யாரும் நம்பவில்லை, புராணங்களின் பெருமையை பறை சாற்றுவதற்காகவே எடுக்கப்படும் இப்படத்தில் நடிப்பது எனக்கு சந்தோஷம் என்று கூறியிருக்கிறார். மேலும் ஒரு படத்தில் ஹீரோ எவ்வளவு முக்கியமோ, வில்லன் கதாபாத்திரமும் அந்த அளவுக்கு முக்கியம். அதனால் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன் எனவும் கூறியிருக்கிறார்.