தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த வாரத்துடன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. விக்ரமன் தான் வெற்றியாளராகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பலருக்கும் இது ஏமாற்றத்தை கொடுத்தது.
இப்படியான நிலையில் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நேதாஜியின் பிறந்த நாளில் அறம் எங்கே செல்லுபடியாகும் என்பது குறித்து பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அத்தை நிலை நாட்ட முடியவில்லை, அப்படி இருக்கையில் நீங்கள் அறம் பற்றி பேசலாமா என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
"அறம் என்கின்ற சொல் தயவு செய்து நீங்கள் உபயோகிக்காதீர்கள் தலைவரே!.
— ihaasan (@ihaasan1) January 23, 2023
அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126 ஆவது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2023