Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

25 ஆயிரம் பேருக்கு அன்னதானம். கார்த்தி ரசிகர் மன்றம் செய்த செயல்.

actor karthi-fans-giving-food-to-25-thousand-people

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில், ‘ஜப்பான்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் கார்த்தி ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்கள்.

அக்டோபர் 17-ஆம் முதல் ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாகும் நவம்பர் 10-ஆம் தேதி வரை இந்த உணவு வழங்குவது தொடரும் என்று கார்த்தி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். அக்டோபர் 17-ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தி. நகர் பகுதியில் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் வீரமணி, மாநில நிர்வாகிகள், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் உடனிருக்க ‘ஜப்பான்’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் இயக்குனர் ராஜுமுருகன் ஆகியோர் ஆயிரம் பேருக்கு சுவையான வழங்கும் திட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். “,

actor karthi-fans-giving-food-to-25-thousand-people
actor karthi-fans-giving-food-to-25-thousand-people