கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விருமன், பொன்னியன் செல்வன்1, சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் கார்த்தி தற்போது “ஜப்பான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்து வருகிறார்.
ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக்கி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டி இருக்கும் இப்படம் பற்றின புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனமான Netflix நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக பட குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Karthi's #Japan post theatrical streaming rights with Netflix. pic.twitter.com/z143PEDjx9
— South Cinemas™ (@SouthCinemas_) January 9, 2023