Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனைவி எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட கார்த்திக்.. குவியும் லைக்ஸ்

Actor karthi latest photo

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் இளைய மகனான இவர் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன்பிறகு இவரது நடிப்பில் வெளியான பையா, சகுனி, தீரன் அதிகாரம் ஒன்று, ஆயிரத்தில் ஒருவன் என பல்வேறு திரைப்படங்கள் வெற்றி கண்டன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக சர்தார் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை தன்னுடைய லைஃப் பார்ட்னர் அதாவது அவருடைய மனைவி ரஞ்சனி தான் எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் இதற்கு லைக்குகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.