Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஓராண்டு நிறைவு செய்த சர்தார். கார்த்தி வெளியிட்ட பதிவு

actor karthi-post-goes-viral

“பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சர்தார்’. இதில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ‘சர்தார்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வரை வசூலை குவித்தது. இந்நிலையில், இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள கார்த்தி ‘சர்தார் 2’ விரைவில் உருவாகவுள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது

actor karthi-post-goes-viral
actor karthi-post-goes-viral