Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூப்பர் ஹிட் 100 கோடி வசூல் படம் கொடுத்தும் சம்பளத்தை ஏற்றாத நடிகர் கார்த்தி!!

பருத்திவீரன் படத்தின் மூலம் பெரிதளவில் ரசிகர்கள் மத்தியில் சென்றடைந்தது வெற்றிபெற்றார் முன்னணி நடிகர் கார்த்தி.

இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேலும் தீரன் அதிகாரம் ஒன்று, தம்பி, கைதி என மிக சிறந்த படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு நடிகர்களில் முக்கியமான ஒருவர் நடிகர் கார்த்தி.

இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் பல சிறந்த பரிமாணங்களில் உள்ளன, அதை நாம் படம் பார்க்கும் பொழுது அறிந்து கொள்வோம்.

இந்நிலையில் இவர் தனது படங்களுக்கு தற்போது வரை வாங்கும் சம்பளம் ரு.12 கோடியாம். இதனை அறிந்த பலருக்கும் இந்த செய்தி மிக பெரிய ஷாக் தான்.

ஆம் தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், போன்ற சூப்பர் ஹிட் படங்களும் சமீபத்தில் ரு.100 கோடி வசூல் செய்த கைதி போன்ற படங்களில் நடித்த பிறகும் தனது சம்பளத்தை ஏற்றாமல் இருக்கிறாராம் நடிகர் கார்த்தி.