தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்திகேயா. இவர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் அவர் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகர் கார்த்திகேயாவுக்கும் அவரது நீண்ட நாள் காதலியான லோஹிதாவுக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்வில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கார்த்திகேயா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என் உயிர்த் தோழியே எனது வாழ்க்கைத் துணை ஆகிறார். எனது திருமண நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சிக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2010-ம் ஆண்டு தனது காதலி லோஹிதாவுடன் எடுத்த புகைப்படத்தையும், தற்போது நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள கார்த்திகேயா, இன்னும் பல ஆண்டுகள் இணைந்திருப்போம் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.