தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், மாதீவ் தாமஸ், உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபலங்கள் யாராவது காஷ்மீரில் இருந்து புகைப்படத்தையோ வீடியோவையோ வெளியிட்டால் ஒருவேளை லியோ படத்தில் நடிப்பாரோ என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இப்படியான நிலையில் லெஜன்ட் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள லெஜன்ட் சரவணா அவர்கள் காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் லெஜன்ட் சரவணன் நடித்து வருவதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ஒருவேளை இருக்குமோ என அவரது வீடியோவை விட்டு கீழே ரசிகர்கள் பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ
#Legend in #Kashmir #TheLegend#LegendSaravanan pic.twitter.com/fYYZ3RsvvD
— Legend Saravanan (@yoursthelegend) February 21, 2023