Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இணைந்த பிரபலம்.வைரலாகும் தகவல்

actor mansoor ali khan joined the shoot of leo

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அர்ஜுன் இணைந்து இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடிக்க இருப்பதாக முன்னதாகவே படக்குழு உறுதி செய்திருந்த நிலையில் இப்போது அவர் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருப்பதாகவும், ஒரு மாதம் அவருக்கான படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

actor mansoor ali khan joined the shoot of leo

actor mansoor ali khan joined the shoot of leo