தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் மாரிமுத்து. அஜித், விஜய் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மாரிமுத்து கடந்த சில தினங்களாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் இவர் அஜித் மற்றும் விஜய் குறித்து பேசியுள்ளார். அதாவது அஜித் யாராவது நல்லதோ கெட்டதோ எது செய்தாலும் அதை மறந்து விடுவார். அது அஜித்தின் நல்ல குணம் என சொல்லியுள்ளார்.
ஆனால் விஜய் அப்படி கிடையாது தனக்கே யார் எது செய்தாலும் அதை சமயம் பார்த்து டபுளாக செய்து விடுவார், அது அவரிடம் இருக்கும் கெட்ட குணம் என தெரிவித்துள்ளார்.
