கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான நடிகராக விளங்கி வருபவர் மகேந்திரன். அதன்பின்னர் விழா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து மீண்டும் பிரபலமானார்.
அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர் தனது சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் மாஸ்டர் மகேந்திரன் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வீடியோவில், பெட்ரோல் பங்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் மகேந்திரனிடம் சகஜமாக பேச அப்போது “தான் விஜயின் தீவிர ரசிகர் என்றும் அவரை இதுவரை பார்த்ததில்லை என்றும் எப்படியாவது பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த மகேந்திரன், இந்த வீடியோவை பார்த்து விஜய் அண்ணா அழைத்தால் ஹேப்பி தான்” என்று தெரிவித்து தளபதிக்கு ரிக்வெஸ்ட்டையும் கொடுத்திருக்கிறார். மேலும் அந்த நபரின் செல்போன் பேக்கேசில் “அன்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால் நாங்கள் கண்ட முதல் அர்த்தம் தளபதி” என்ற வாசகம் விஜய்யின் புகைப்படத்துடன் வைத்திருப்பதையும் காண்பித்துள்ளார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.
View this post on Instagram