மிர்ச்சி செந்தில் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஆர் ஜேவாக பயணத்தை தொடங்கியவர் செந்தில் அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது செந்தில் மற்றும் ஸ்ரீஜாவிற்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிவிட்டதை மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் மூலம் வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் காதல் ஜோடிக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram