தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கூடிய விரைவில் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க உள்ளது. தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தமிழைப் போலவே தெலுங்குவில் ஸ்டார் மா தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை ஆறு சீசன் முடிவடைந்து ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நாகர்ஜுனா இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என முடிவெடுத்து நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார்.
இதனால் தெலுங்கு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இனி வரும் சீசன்களை விஜய் தேவரகொண்டாவை வைத்து தொகுத்து வழங்கலாம் என நிகழ்ச்சி குழு முடிவெடுத்து அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
