Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அவரை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன்… நரேன் நெகிழ்ச்சி

actor narain about kamal movie

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் “விக்ரம்”. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடிக்கிறார். ஏற்கனவே இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த கைதி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்தில் இணைந்திருப்பது குறித்து நடிகர் நரேன் கூறுகையில், “இது என் வாழ்நாளில் மிக முக்கியமான படம். கைதி படம் முடித்த பிறகு நான் இரண்டு படங்கள் நடித்து முடித்திருந்தேன். விக்ரம் படத்தின் டீசர் வெளியான போது லோகேஷிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இப்படத்தில் உண்டு என்று சொன்னார். கேட்டவுடன் கனவு நிறைவேறியது போல உணர்ந்தேன். கமல்ஹாசன் சாரை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன்” என்றார்.