தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி. மலையாள நடிகரான இவர் தமிழில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் இரண்டிலும் வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் இவர் டொயோட்டோ வெல்ஃபையர் என்ற பிரம்மாண்ட காரை வாங்கியுள்ளார். இந்த காரின் உள்ளே மிகப்பெரிய அளவு இடவசதி இருக்கும் என சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு கேரவன் போல இருக்குமாம்.
பெரிய டிவி, வைஃபை வசதி, மிகவும் மிருதுவான வசதிக்கு ஏற்ப மாற்றி கொள்ளும் இருக்கை வசதி, தொடுதிரை, சார்ஜர் என எக்கச் சக்கமான வசதிகள் இந்த காருக்குள் இருக்கிறது.
இதன் ஷோரூம் விலையே 90.80 லட்சம் என சொல்லப்படுகிறது. ஆன்ரோடு விலையில் கோடி ரூபாய்க்கு மேல கொடுத்து இந்த காரை வாங்கியுள்ளார் நிவின்பாலி. இதுகுறித்த தகவல் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
