Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பூதமாக மாறிய பிரபுதேவா.. வைரலாகும் வீடியோ

Actor prabudeva-bootham-character-video

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர் மற்றும் நடன இயக்குனருமான பிரபுதேவா அவர்களின் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் தான் “மை டியர் பூதம்”. இப்படத்தை மஞ்சப்பை, கடம்பன் ஆகிய படங்களை இயக்கிய என்.ராகவன் இயக்கியுள்ளார். இதில் பிரபுதேவாக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் இணைந்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மாஸ்டர் அஸ்வந்த் நடித்துள்ளார்.

காமெடி மற்றும் மாயாஜாலம் நிறைந்திருக்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரித்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்திருக்கிறார்.

வரும் ஜூலை 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இந்த “மை டியர் பூதம்” படத்தின் திரையரங்கில் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பிரபுதேவா எப்படி பூதமாக மாறுகிறார் என்பதைக் குறித்து ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பிரபுதேவாவிற்கு பூதம் போல் மேக்கப் போடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.