தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ்.
அஜித் விஜய் ரஜினி கமல் தனுஷ் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். திறமையான நடிகரான இவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
கர்நாடக அரசியலில் ஈடுபட்டு வரும் பிரகாஷ் பார்த்த போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கிரீன் இந்தியா சேலஞ்ச் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனக்கு எம்பி ஒருவர் சவால் விட அதனை ஏற்று தன்னுடைய மகனுடன் மரக்கன்றை நட்டு உள்ளார் பிரகாஷ்ராஜ். இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நடிகர் சூர்யா, மோகன்லால், திரிஷா உள்ளிட்டோருக்கு சவால் விடுத்துள்ளார்.
இவர்களில் பிரகாஷ் ராஜின் சவாலை ஏற்று யார் யார் மரக்கன்றுகளை நட போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Thank you @MPsantoshtrs for this initiative. i have accepted #GreenindiaChallenge
from @TanikellaBharni Planted 3 saplings.Further I am nominating @Mohanlal @Suriya_offl @rakshitshetty @meramyakrishnan @trishtrashers and everyone of you too ..pls🙏🏻continue the chain #JustAsking pic.twitter.com/HrCNAvEGve— Prakash Raj (@prakashraaj) October 1, 2020